ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை.. எதிர்க்கட்சி தலைவருக்கு பிரியங்கா காந்தி தான் கரெக்ட் - மத்திய அமைச்சர்

ஒருவேளை பிரியங்கா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், அவையில் விவாதங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்
 ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை.. எதிர்க்கட்சி தலைவருக்கு பிரியங்கா காந்தி தான் கரெக்ட் - மத்திய அமைச்சர்
Published on

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்க ராகுல் காந்தியை விட, அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கு தான் அதிக தகுதி உள்ளது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ரிஜிஜு, "ராகுல் காந்தியிடம் அரசியல் பக்குவம் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். ராகுல் காந்திக்கு இன்னும் போதிய அரசியல் முதிர்ச்சி வரவில்லை.

மக்களவையில் ராகுல் காந்தி விவகாரங்களை அணுகும் முறை மற்றும் பேசும் விதத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்குரிய தீவிரம் காணப்படவில்லை.

வெறும் அரசை விமர்சிப்பது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதே எதிர்க்கட்சித் தலைவரின் முக்கியப் பங்கு, ஆனால் ராகுலிடம் அது குறைவாக உள்ளது.

ராகுலுடன் ஒப்பிடுகையில், பிரியங்கா காந்திக்கு அரசியல் குறித்த சிறந்த புரிதலும் மக்களுடன் கலந்து பழகும் திறனும் அதிகம் உள்ளது.

ஒருவேளை பிரியங்கா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், அவையில் விவாதங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

ரிஜிஜுவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com