ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமை அடைகிறோம் - ராகுல் காந்தி

பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என இந்திய ராணுவம் பெயர் வைத்துள்ளது. மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமை அடைகிறோம் - ராகுல் காந்தி
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.

பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என இந்திய ராணுவம் பெயர் வைத்துள்ளது.

மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமை அடைகிறோம், ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com