பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது - ராகுல் காந்தி

வெறுப்பையும் அச்சத்தையும் பரப்பும் சக்திகளுக்கு முன்னால் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் எனது உளமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தையும், அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. அதேபோல், இந்த இழிவான செயலுக்கு பொறுப்பானவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நினைவுகள், இன்றும் எங்கள் இதயங்களை உலுக்குகிறது. அந்த தியாகிகள் குடும்பத்தினரின் துயரம், நம் அனைவரின் துயரமாகும். அவர்களின் தியாகம் நாட்டின் ஆன்மாவில் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும்.

பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக ஒட்டுமொத்த நாடும் அன்றும், இன்றும் ஒன்றுபட்டு நிற்கிறது. என்னென்றும் அவ்வாறே நிலைத்திருக்கும். வெறுப்பையும் அச்சத்தையும் பரப்பும் சக்திகளுக்கு முன்னால் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது. மாறாக, இன்னும் மிகுந்த வலிமையுடனும், ஒற்றுமையுடனும், உறுதியுடனும் நாம் அவர்களுக்கு எதிராக துணைநிற்போம். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com