‘தபோரியை போல நடந்துகொள்ளும் ராகுல் காந்தி’ - கங்கனா ரனாவத் விமர்சனம்

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரு ரவுடியைப் போல நடந்துகொள்வதாக பாஜக எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
‘தபோரியை போல நடந்துகொள்ளும் ராகுல் காந்தி’ - கங்கனா ரனாவத் விமர்சனம்
Published on

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் அமர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட்ட சம்பவத்திற்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்துவருகிறது.

மேலும் இதுதொடர்பாக அவர் மன்னிப்புக் கோர வேண்டுமென 84 முன்னாள் அரசு அதிகாரிகள், 116 மூத்த தலைவர்கள் மற்றும் நான்கு வழக்கறிஞர்கள் கொண்ட குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தியின் இந்த செயலால் பெண் பிரதிநிதிகள் அசௌகரியமாக உணர்வதாகவும், ராகுல் காந்தி ஒரு ரவுடியைப்போல நடந்துகொள்வதாகவும், அனைவரையும் மரியாதை இல்லாமல் அவர் பேசுவதாகவும், பேட்டி அளிப்பவர்களை கேலி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை பார்த்து எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com