VIT | கியூ.எஸ். பாட பிரிவு தரவரிசை: பொறியியல்-தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலை. இந்திய அளவில் 6-ம் இடத்துக்கு முன்னற்றம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வாகி உள்ளது.
VIT | கியூ.எஸ். பாட பிரிவு தரவரிசை: பொறியியல்-தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலை. இந்திய அளவில் 6-ம் இடத்துக்கு முன்னற்றம்
Published on

வேலூர்:

கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழகங்களின் பாடபிரிவு தரவரிசை பட்டியலில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 119-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான 'கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' 2026-ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக பாட பிரிவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் 100 பகுதிகளில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் 18,300-க்கும் அதிகமான பாடத்திட்டங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு பதிப்பில், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 17 பாடப்பிரிவுகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வாகி உள்ளது.

இதுகுறித்து, விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் கூறியதாவது:

கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழகங்களின் பாடபிரிவு தரவரிசை பட்டியலில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 119-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவிலான தரவரிசையில் 6-ஆம் இடம் பிடித்துள்ளது.

இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பாட பிரிவில் 86-வது இடமும், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பாட பிரிவில் 87-வது இடமும் என 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

அதேபோல கணிதவியலில் 104-வது இடமும், டேட்டா சயின்ஸ் அன்ட் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 101-200, மெட்டிரியல் சயின்ஸ் 137-வது இடமும், மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல் அன்ட் மேனுபேக்சரிங் பிரிவில் 148-வது இடமும் என 200 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

இந்திய அளவில் ஆர்ட் அன்ட் டிசைன் பிரிவில் 3-ஆம் இடமும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் 6-வது இடமும், கணிதவியலில் 5-வது இடத்தையம், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாட பிரிவில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் முறையாக தரவரிசையில் ஆர்ட் அன்ட் மற்றும் டிசைன் 201 -300, சிவில் என்ஜினீயரிங் பாட பிரிவில் 201-275-ம் இடம் பிடித்துள்ளது.

அதேபோல கெமிக்கல் பாட பிரிவில் 201-250, வேதியியல் மற்றும் இயற்பியல், வானியல் ஆகிய பாட பிரிவுகளில் 251-300 தர வரிசையும், புள்ளியியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சியில் 251-275, பயாலாஜிகல் சயின்சஸ் 301-350, சுற்றுச்சூழல் அறிவியல் 351-400, வேளாண்மை மற்றும் வனவியல் 401-475, வணிக மேலாண்மை ஆய்வுகள் 451-500, மருத்துவ பாட பிரிவில் 551-600 தரவரிசையில் இடங்களை பிடித்துள்ளது.

கியூ.எஸ். தரவரிசை முன்னேற்றத்திற்கு பல்கலைக்கழகத்தின் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளது. மேலும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியவையும் தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.

மேலும் ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்ட பாடத்திட்ட வடிவமைப்பில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீடுகள் தரவரிசை முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com