திருப்பதி நடைபாதையில் மலைப்பாம்பு - பக்தர்கள் பீதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்தப் பாம்பு பிடிப்பாளரான பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்தார்.ன
திருப்பதி நடைபாதையில் மலைப்பாம்பு - பக்தர்கள் பீதி
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தனர். நடைபாதையில் உள்ள மொக்கல்லா மலைக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளை நோக்கி 12 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு வந்தது. அதைக் கண்ட பக்தர்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்தப் பாம்பு பிடிப்பாளரான பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் அந்த மலைப்பாம்பைப் பிடித்தார். இதனை பக்தர்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. நடைபாதையில் வன விலங்குகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. அங்குள்ள காட்டு பகுதிக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com