ஆபரேஷன் லோட்டஸ் பஞ்சாபில் பலிக்காது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி குறித்து முதல்வர் பகவந்த் மான்

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில், அரசுக்கு ஆதரவாக 93 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
ஆபரேஷன் லோட்டஸ் பஞ்சாபில் பலிக்காது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி குறித்து முதல்வர் பகவந்த் மான்
Published on

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மெது நேற்று சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில், அரசுக்கு ஆதரவாக 93 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.

ஆம் ஆத்மிக்கு 92 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன் இந்த எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.

முதல்வர் பகவந்த் மான் மது அருந்திவிட்டு சபைக்கு வந்துள்ளாரா என்பதைச் சோதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பாஜகவினரும் வெளியேறினர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பகவந்த் மான், "எங்கள் அரசு பாறையைப் போல உறுதியானது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' பஞ்சாபில் பலிக்காது. கட்சி மாறிய எம்.பி-க்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர், ஆனால் எங்கள் எம்.எல்.ஏக்கள் கட்சியுடன் உறுதியாக நிற்கிறார்கள்" என்று கூறினார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான ராகவ் சதா, ஸ்வாதி மாலிவால் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால், பஞ்சாப் அரசு கவிழும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com