

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 25 வயது கேட்டன் அகர்வாலுக்கும், 20 வயது ஜியா கோயலுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு வரும் நவம்பரில் ஜெய்ப்பூர் அரண்மனையில் ரூ. 17 கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவிருந்தது.
விருந்தினர்களுக்காக இரண்டு தனியார் விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனையே வருங்கால தம்பதிகள் இருவரும் மகராஷ்டிராவின் பிரசித்தமான லோகாகாட் கோட்டைக்கு கடந்த ஜூன் 18 அன்று விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர்.
கோட்டையின் உயரமான பகுதியில் இருந்து கேட்டன் கீழே விழுந்து உயிரிழந்தார். முதலில் இது எதிர்பாராத விபத்து என கருதப்பட்ட நிலையில் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என தெரிவந்தது.
வருங்கால மனைவி சியா, தனது 22 வயது காதலன் சேட்டன் சவுத்ரியுடன் இணைந்து கேட்டனை கீழே தள்ளி விட்டு கொன்று நாடகம் ஆடியுள்ளனர்.
இந்த வழக்கு நாடு முழுவதும் கவனம் ஈர்த்த நிலையில் விசாரணை முடிவிடப்பட்டுள்ளதால் புதிய புதிய அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இன்று சியாவை கோட்டைக்கு அழைத்துச் சென்று போலீசார் குற்றச்சம்பவத்தை மீண்டும் அரங்கேற்றிப் பார்த்தனர்.
இதனிடையே போலீசில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வது என சியா, கூகுளில் தேடியதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தரவுகள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கேட்டனை கொலை செய்வதற்கு முன் அந்த கோட்டைக்கு, சியா தனது காதலன் சேட்டன் உடன் சென்று ஒத்திகை பார்த்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, தங்கள் அண்மைக் கால செல்போன் பதிவுகள், ஹிஸ்டரிகளை இருவரும் அழித்துள்ளனர்.
ஆனால் அதுவே அவர்கள் மீதும் மேலும் சந்தேகத்தை அதிகரித்தது. மேலும் உயிரிழந்த கேட்டனின் சகோதரிக்கும் சியாவின் நடத்தை மீது சந்தேகம் இருந்துள்ளது.
கேட்டன் இறுதிச் சடங்கின்போது அவர் நடந்த விதம், சம்பவம் குறித்து சியா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையாக சொன்னது எல்லாம் சேர்ந்து அவர் மீதான சந்தேகம் வலுத்து போலீசாரையும் விசாரிக்க தூண்டியது. இதன் பின்னரே அவரின் குற்றம் அம்பலப்பட்டுள்ளது.
கேட்டனை திருமணம் செய்ய சியா முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவரின் மனம் மாறியுள்ளது.
இதற்கு சியா போலீசிடம் பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக கேட்டன் தனது வழுக்கையை மறைக்க விக் வைத்திருத்தத்தையும் அவரை கொல்ல சியா ஒரு காரணம் என்று சியா சொன்னது போலீசையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.