பிரதமர் வேண்டுகோள் - டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்’!

அனைத்து அமைச்சர்களின் அதிகாரிகளும் திங்கட்கிழமைகளில் பயணத்திற்கு டெல்லி மெட்ரோவைப் பயன்படுத்துவார்கள்.
பிரதமரின் வேண்டுகோள் - டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்’
Published on

டெல்லியில் அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டும் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அலுவல் கூட்டங்கள் இனி இணையவழியில் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, ‘எனது இந்தியா, எனது பங்களிப்பு’ என்ற திட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், திங்கள்கிழமைகளில் அமைச்சர்களின் அதிகாரிகள் பயணத்திற்கு மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com