

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகள் டிப்னி டிரம்ப். இவர் டொனால்டு டிரம்பின் 2வது மனைவியின் மகள்.
இந்நிலையில், டிப்னி டிரம்ப் தனது கணவர் மைக்கேல் பவுலோஸ் உடன் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த டிப்னி அங்கிருந்து விமானம் மூலம் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்குச் சென்றார். அவர் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை தனது கணவருடன் சென்று பார்வையிட்டார்.
தாஜ்மகாலின் கட்டிடக் கலையைச் சுற்றிப் பார்த்த அவர்கள், அங்கு பல்வேறு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
தாஜ்மகாலை பார்வையிட்டபின் டிப்னி டிரம்ப் விமானம் மூலம் ராஜஸ்தான் செல்கிறார். டிப்னி டிரம்ப் வருகையை முன்னிட்டு தாஜ்மகாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முன்னதாக, சமீபத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தனது மனைவி ஜேனெட் ரூபியோவுடன் தாஜ்மகாலைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.