பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி மறைவு - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் நேற்று காலமானார்.அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரகாஷ்சிங் பாதல் மறைவு வருத்தமளிக்கிறது. நம் நாட்டிற்கு பெரிதும் பங்களித்த தலைவர்களில் ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவரை நமது தேசம் இழந்துவிட்டது. நெருக்கடியான காலங்களில் பஞ்சாப் மாநிலத்துக்காக அயராது உழைத்தார் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com