என் மலர்
இந்தியா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - ஜன. 31-ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
- 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் துவங்குகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற இருக்கிறார். முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிறகு இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவைும் நிதியமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார்.






