சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்- வீடு புகுந்து பெண்ணிடம் ரூ.1 லட்சம் கேட்டு அடம் பிடித்த சாமியார்கள்

ஆசிரமத்தில் உள்ள பசுக்களை பராமரிக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என தெரிவித்தனர்.
சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்- வீடு புகுந்து பெண்ணிடம் ரூ.1 லட்சம் கேட்டு அடம் பிடித்த சாமியார்கள்
Published on

தெலுங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூரை சேர்ந்தவர் பிரசாத் ராவ். இவரது மனைவி மணி. இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தபடி மணி வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மணியிடம் எங்களுக்கு ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ள பசுக்களை பராமரிக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மணி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார். இதனைக் கேட்ட சாமியார்கள் பணத்தை தரவில்லை என்றால் சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்தனர். இதனைக் கேட்டு பயந்து போன மணி வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை சாமியார்களிடம் கொடுத்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த மணியின் மருமகன் வெங்கட சிவராம கிருஷ்ணாவிடமும் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து மணியும், அவரது மருமகனும் போலீசில் புகார் செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து சாமியார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com