சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - இரண்டு கராத்தே பயிற்சியாளர்களுக்கு ஆயுள் தண்டனை

சச்சின் பட்நகர் என்ற கராத்தே பயிற்சியாளர் சிறுமியை உடல்ரீதியான பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
POCSO Verdict
Published on: 

மத்திய பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், இரண்டு கராத்தே பயிற்சியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

குனோ மாவட்டத்தில் உள்ள எம்.பி. வாடோ காய் கராத்தே சங்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு 12 வயது சிறுமி பயிற்சி பெறுவதற்காக சேர்ந்துள்ளார்.

அப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்து சென்று, கராத்தே பயிற்சியாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

சச்சின் பட்நகர் என்ற கராத்தே பயிற்சியாளர், அந்த சிறுமியை உடல்ரீதியான பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த உடல்ரீதியான பாலியல் துன்புறுத்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரையும் நீடித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2021-ஆம் ஆண்டு தனது தாயிடம் கூறியதையடுத்து, குனோ மாவட்ட காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதன் மீதான விசாரணை நேற்று குனோ மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி சோனாலி ஷர்மா முன்பு வந்தது.

அப்போது குற்றம்சாட்டப்பட்ட சச்சின் பட்நகர் மற்றும் ஜக்வீர் ஜாதவ் ஆகிய இரண்டு கராத்தே பயிற்சியாளர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ.7,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com