என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை.. ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்துகிறார்- கார்கே தாக்கு
- பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
- பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, அதற்கு பதிலாக ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்துகிறார்.
இன்று, மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அவர்கள் போராடுவார்கள், அதை தொடருவார்கள். இதனால் ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்தில் நீங்கள் பேச விரும்பவில்லை. ராஜஸ்தானில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது அரசியல் பேச்சு நடத்த விரும்புகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.