என் மலர்tooltip icon

    இந்தியா

    தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகை ஆஷா பரேக்

    தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
    • நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    புதுடெல்லி:

    திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கௌரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

    இதற்கிடயே, பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டு இவ்விருது வழங்கப்படுகிறது. 1960 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் இந்தியில் பிரபலமாக திகழ்ந்த ஆஷா பரேக் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    79 வயதான இவர் 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார்.

    இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆஷா பரேக் ஜி ஒரு சிறந்த திரைப்பட ஆளுமைமிக்கவர். அவரது நீண்ட வாழ்க்கையில் பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×