பாலியல் குற்றவாளி ஜோதிடருடன் நெருக்கம் - மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா | Women's Commission

பெண்களுக்கு நீதி வழங்க வேண்டிய பதவியில் இருப்பவர், பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டனத்துக்கு உள்ளானது.
பாலியல் குற்றவாளி ஜோதிடருடன்  
நெருக்கம் - மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா | Women's Commission
Published on: 

மகாராஷ்டிராவில் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் கரத், தனக்கு தெய்வ சக்தி இருப்பதாகக் கூறி ஜோதிடராக மாறி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் 35 வயது பெண் ஒருவரை மூன்று ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், கடந்த புதன்கிழமை நாசிக்கில் வைத்து போலீசார் இவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவில், சுமார் 58 ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட அசோக் கரத்துடன் மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவி ரூபாலி சக்கங்கர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பெண்களுக்கு நீதி வழங்க வேண்டிய பதவியில் இருப்பவர், பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது பலர் சாடினர். குறிப்பாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இந்த விவகாரம் மாநில அளவில் சர்ச்சையான நிலையில் ரூபாலி சக்கங்கர், மகளிர் ஆணைய தலைவி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ரூபாலி சக்கங்கர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com