Phonepe வாலட்டை நீண்ட நாள் பயன்படுத்தாமல் உள்ளீர்களா? இனிமேல் கட்டணம்தான்..!

பிடித்தம் செய்யப்படும் கட்டணம் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்று ஃபோன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
PhonePe Wallet Fee
Published on

ஃபோன்பே வாலட்:

ஃபோன்பே வாலட் என்பது ஃபோன்பே செயலியில் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் ப்ரீபெய்ட் கட்டணக் கருவியாகும்.

வாலட் பயனாளர்கள் தங்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி, இதில் முன்கூட்டியே பணத்தை சேமித்து வைக்கலாம்.

இதன்மூலம் ஒவ்வொரு முறையும் வங்கிக் கணக்கு கடவுச்சொல் அல்லது UPI PIN-ஐ உள்ளிடாமல் உடனடியான ஒரே கிளிக் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

ஃபோன்பே வாலட் கட்டணங்கள்:

இந்த நிலையில் ஃபோன்பே வாலட் பயனாளர்கள் தொடர்ந்து 365 நாட்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை என்றால், ரூ.100 காலாண்டு பராமரிப்பு கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டணம் தற்போதுள்ள வாலட்களில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என்றும், ஆனால் எதிர்மறை (minus) இருப்பையோ அல்லது வங்கிக் கணக்குக்ளையோ பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்தம் செய்யப்படும் கட்டணம் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பே பயனாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன்பின்பு வாலட் செயலற்றதாக கருதப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோன்பே பயனாளர்கள் வாலட் அம்சத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றால், செயலியில் உள்ள வாலட் இருப்பை deactivate செய்து தேவையற்ற கட்டண பிடித்தத்தை தவிர்த்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com