

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்தாலும், மாலை 5 மணி வரை 3.21 கோடி வாக்காளர்களில் சுமார் 89.99% பேர் வாக்களித்துள்ளனர்.
முதற்கட்டமாக கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 93%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.
மேற்கு வங்கம் உட்பட தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.