இந்திய ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதியா?.. மத்திய அரசு விளக்கம்

2016ல் போடப்பட்ட LEMOA ஒப்பந்தம், இரு நாட்டு ராணுவங்களும் எரிபொருள் நிரப்ப, பழுது பார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்கள் வழங்க வழிவகை செய்கிறது.
இந்திய ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதியா?.. மத்திய அரசு விளக்கம்
Published on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா தனது ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க உள்ளதாக பரவிய செய்தி முற்றிலும் பொய்யானது என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரு பத்திரிகையாளர் தனது சமூக வலைதளப் பதிவில், ஈரான் மீதான தாக்குதலுக்காக LEMOA ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் மேற்கில் கொங்கண் கடற்கரை பகுதிகளில் அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நிறுத்த இந்தியாவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் இந்தியக் கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட உள்ளதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் 2016 ல் போடப்பட்ட LEMOA ஒப்பந்தம், இரு நாட்டு ராணுவங்களும் எரிபொருள் நிரப்புதல், பழுது பார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்கள் வழங்குதல் போன்ற Logistics உதவிகளைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே வழிவகை செய்கிறது.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானந்தாங்கி கப்பல்களை நிறுத்தும் அளவிற்கு நீளமான மற்றும் ஆழமான கப்பல் தளங்கள் இந்தியக் கடற்படையிடம் தற்போது இல்லை.

இந்த வதந்திகள் இந்தியாவின் நடுநிலையை கெடுப்பதாக வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு தளங்களை அமெரிக்கா பயன்படுத்த மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com