ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தோள்பட்டை நோயால் அவதி

இரு தோள்பட்டைகளையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகு, ரோட்டேட்டர் கஃப் மற்றும் தோள்பட்டை தசைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
பவன் கல்யாண்
Published on: 

ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இரு தோள்களிலும் உள்ள தோள் பட்டை தசைநார் மற்றும் தசை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார்.

தோள்பட்டை தசை காயங்களே இதற்குக் காரணம். அவர் நேற்று தனது மனைவி அண்ணா கொனிடேலாவுடன் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்குச் சென்றார். இரு தோள்பட்டைகளையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகு, ரோட்டேட்டர் கஃப் மற்றும் தோள்பட்டை தசைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என்று அவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிர்வாக மற்றும் அலுவல் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com