டெல்லி மருத்துவமனையில் நோயாளி தற்கொலை மிரட்டல்

மருத்துவமனை ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அந்த நபரை கீழே இறங்கி வருமாறு கூறினர்.
டெல்லி மருத்துவமனையில் நோயாளி தற்கொலை மிரட்டல்
Published on

டெல்லியின் ஆனந்த் விஹாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் இன்று காலை 5-வது மாடி பால்கனியின் விளிம்பில் ஏறி நின்று கீழே குதிப்பதாக மிரட்டல் விடுப்பதாக டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. மருத்துவமனை ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அந்த நபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். எனினும் அவர் கேட்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. ஏராளமான மக்கள் மருத்துவமனையின் முன்பாக கூடினர். தொடர்ந்து அவரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இறுதியாக அவர் கீழே கொண்டுவரப்பட்டதாக அதிகாரி தெரவித்தனர்.

நோயாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com