ரெயிலில் பெர்த் கிடைக்கல, ஆனா பிரச்சனை இல்ல.. பயணியின் பயங்கர ஐடியா.. இணையத்தில் வைரல்!

பெரும்பாலும் ரெயில்களில் பயணிப்பதில் உள்ள சவால்கள் பற்றிய உரையாடல்களே காண முடிந்தது. பலர் பாராட்டினாலும், மற்றவர்கள் இது சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
ரெயிலில் பெர்த் கிடைக்கல, ஆனா பிரச்சனை இல்ல.. பயணியின் பயங்கர ஐடியா.. இணையத்தில் வைரல்!
Published on

பண்டிகை காலங்களில் நெரிசல் மிகுந்த ரெயிலில் பயணம் செய்வது மிகவும் வேதனையான அனுபவங்களில் ஒன்றாகும். நெரிசலான ரெயில்களில் ஒருவரையொருவர் இருக்கைக்காக தள்ளிக்கொண்டு ஏறுவது, சண்டையிட்டு கொள்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ அவ்விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது.

14 வினாடிகளே ஓடும் வீடியோவில், பயணி ஒருவர் தற்காலிகமாக தூங்குவதற்காக கயிற்ற கட்டிலை உருவாக்குகிறார். அதாவது, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி இரண்டு படுக்கைகளுக்கு இடையில் ஒரு கட்டிலை உருவாக்குகிறார். இதனை அந்த பயணி உருவாக்கிய போது சக பயணிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த பயணியின் செயலை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவிற்கு "நவீன பிரச்சனைகளுக்கு நவீன தீர்வுகள் தேவை" என தலைப்பிடப்பட்டு இருந்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் ரெயில்களில் பயணிப்பதில் உள்ள சவால்கள் பற்றிய உரையாடல்களே காண முடிந்தது. மேலும் அந்த பயணியின் திறமையை பலர் பாராட்டினாலும், மற்றவர்கள் இது சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com