என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்: வெற்றிகரமாக வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் முறியடிப்பு- இந்திய ராணுவம்
    X

    பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்: வெற்றிகரமாக வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் முறியடிப்பு- இந்திய ராணுவம்

    • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறல்.
    • இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 7ஆம் தேதி 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான ராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.

    குறிப்பாக இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது.

    Next Story
    ×