

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது என்பவருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக ஹபீஸ் சயீது என்பவர் மீது 1,597 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிக்கையில், ஹபீஸ் சயீத்தின் பங்கு மற்றும் பாகிஸ்தானின் சதித்திட்டம் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த 2008-ஆம் ஆண்டு 26/11 மும்பையில் நடந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக பயங்கரவாதி சயீத் மீது என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இதையடுத்து இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக பயங்கரவாதி சயீத் அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து தனது முதல் குற்றப்பத்திரிக்கையில், சுற்றுலா பயணிகளை கொன்ற மூன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகளான ஃபைசல் ஜாட் என்ற சுலைமான், ஹபீப் தாஹிர் என்ற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி ஆகியோரை என்.ஐ.ஏ அடையாளம் கண்டுள்ளது.
மேலும் அதில், சாஜித் சைஃபுல்லா ஜாட் என்ற லங்டா, பஷீர் அகமது ஜோதாத், பர்வைஸ் அகமது ஆகியோர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில், மூன்று பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு, பைசரன் புல்வெளிக்கு வெளியே மதிய உணவு உண்டதாகவும், தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு கொண்ட்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளது.
பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை, குற்றப்பத்திரிக்கை மேற்கோள் காட்டியதுடன், சாஜித் ஜாட் என்ற பயங்கரவாதி தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கியதை உரையாடல்கள் காட்டியதாகவும் கூறியது.
தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமியின் இந்திய பிரிவின் தரவுகளின் அடிப்படையில், அந்த இரண்டு தொலைபேசிகளும் பாகிஸ்தானில் விற்கப்பட்டதாக என்.ஐ.ஏ. கூறியது.
குற்றப்பத்திரிகையின்படி, 2025, ஏப்ரல் 21 அன்று, அந்த மூவரும் புல்வெளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்வைஸ் அஹ்மத்தின் வீட்டில் தங்கியதாகவும், இரவு சுமார் 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டதாகவும் கூறியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தெஹ்ரிக்-ரோந்து கூட்டமைப்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் ஜாட் என்ற பயங்கரவாதி மூலம் இந்த முழு சதித்திட்டத்தையும் அரங்கேற்றியதாகவும் கூறியது.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா 2025 மே 7 அன்று அதிகாலையில் 'ஆபரேஷன் சிந்துர்' என்ற நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.