2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள் - ஓர் பார்வை

சமூகப்பணிக்காக எஸ்.கே.எம்.மயிலானந்தன், மருத்துவப்பணிக்காக கே.ஆர். பழனிசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள் - ஓர் பார்வை
Published on

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு 2 பேருக்கு பத்ம பூஷனும், 11 பேருக்கு பத்ம ஸ்ரீயும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.

குறிப்பாக்க புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக் கலை மாஸ்டரும், பாரம்பரியக் காவலருமான திரு கே. பழநிவேல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக் கலை மாஸ்டரும், பாரம்பரியக் காவலருமான திரு கே. பழநிவேல் அவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.

மேடையில் ஏறி விருது பெறுவதற்கு முன் பழநிவேல் பிரதமர் மோடி முன் மரியாதை நிமித்தமாக விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பிரதமர் மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவரை அரவணைத்து மேடைக்கு அனுப்பி வைத்தார்.

சமூகப்பணிக்காக எஸ்.கே.எம்.மயிலானந்தன், மருத்துவப்பணிக்காக கே.ஆர். பழனிசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறை பணிக்காக சென்னை ஐஐடி இயக்குனர் வி. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

அதேபோல, கே. ராமசாமி (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), டாக்டர் புன்னியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), திருவாரூர் பக்தவத்சலம் (கலை), ரஞ்சனி பாலசுப்ரமணியன் மற்றும் காயத்ரி பாலசுப்ரமணியன் (கலை), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி), எச்.வி. ஹண்டே (மருத்துவம்), (மறைவுக்குப் பின்) ஆர். கிருஷ்ணன் (கலை) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசன்

25 ஆண்டு காலமாக சித்த மரபுவழி மூலிகைகளை கால்நடைகளுக்கு எடுத்து செல்வதிலும், களப்பணிக்காகவும் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது.ஆங்கில மருத்துவத்தின் அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்படுத்தி மரபுவழி சித்த மருத்துவத்தை தொடர்ந்து புண்ணியமூர்த்தி நடேசன் செயல்படுத்தி மக்களிடம் கவனம் பெற்றார்.

சிற்பி ராஜா

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த 64 வயதான சிற்பி ராஜா, தமிழ்நாடு அரசு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகத்தில் சிற்ப கலை பட்டய பயிற்சி பெற்று, 51 ஆண்டுகளாக சிற்ப கலையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 4 ஆயிரம் சிலைகள் அவர் செய்துள்ளார். அவை அனைத்தும் ஐம்பொன்களால் செய்யப்பட்டவை.

மறைந்த ஓவியர் கிருஷ்ணன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ஓவியர் கிருஷ்ணன். பழங்குடியின மக்களின் கலாசாரம், வழிபாடு, பண்டிகைகள், வேட்டையாடுதல் ஆகியவற்றை மையமாக வைத்து குறும்பா ஓவியங்களை சிறுவயது முதலே கிருஷ்ணன் வரைந்து வந்தார். இவர் கை வண்ணத்தில் உருவான குறும்பா ஓவியங்கள் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி தேதி கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் இறந்தார்.

ஓதுவார் சுவாமிநாதன்

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓதுவார் சுவாமிநாதன். 81 வயதான இவர் திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஓதுவராக 26 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவிலில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்ப பயிற்சியாளர் பழனிவேல்

புதுவை மாநிலம் பூராணங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் பழனிவேல். 53 வயதான இவர் 7-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். தனது 14 வயதில் தெருக்கூத்து கலைஞராக கலைபயணத்தை தொடங்கினார். இவருக்கு காளியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுபுற கலைகளும் கற்று அறிந்தார்.

அதன்பின் சிலம்பம் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டு, அதனையும் கற்றுக்கொண்டார். 2004-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவரது கலைசேவையை பாராட்டி, புதுவை அரசு சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2024-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார். இவருக்கு சியாமளா தேவி என்ற மனைவியும், ரஞ்சன் என்ற மகனும் உள்ளனர். தந்தையைபோன்று மகனும் சிலம்ப பயிற்சியாளராக உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com