ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடத்த இந்திய ராணுவம் தயார் - தளபதி உபேந்திர திவேதி

நவீனகால போர்களை எதிர்கொள்ளும் வகையில் திறனை மேம்படுத்தி வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடத்த இந்திய ராணுவம் தயார் - தளபதி  உபேந்திர திவேதி
Published on

தேவைப்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர்' அடுத்த கட்டத்தை மேற்கொள்ள இந்திய ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்று ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது அங்கு தற்காலிகப் போர்நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.

நவீனகால போர்களை எதிர்கொள்ளும் வகையில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகள் தங்களின் கூட்டுத் திறனை மேம்படுத்தி வருகின்றன" என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com