

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.
மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் கவர்னர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடனும் அவர் பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி எல்லை பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்ட அமித்ஷா, விடுப்பில் உள்ள அனைத்து ராணுவ அதிகாரிகளும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார்.