ஆபரேஷன் லோட்டஸ்.. எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ரிசார்ட்டில் பதுக்கிய ஒடிசா காங்கிரஸ் | Rajya shaba election

ஆபரேஷன் லோட்டஸ்.. எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ரிசார்ட்டில் பதுக்கிய ஒடிசா காங்கிரஸ் | Rajya shaba election
Published on
Summary

'ஆபரேஷன் லோட்டஸ்' மூலம் பாஜக பெரிய அளவிலான சலுகைகளை வழங்கி தங்கள் எம்.எல்.ஏக்களை கட்சி மாறி வாக்களிக்க அழுத்தம் கொடுப்பதாக காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 37 மாநிலங்களவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆதரவை தக்க வைக்க ஒடிசா காங்கிரஸ், ரிசார்ட் அரசியலில் இறங்கியுள்ளது.

சுமார் 10 முதல் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு தனியார் ரிசார்ட் ஒன்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

'ஆபரேஷன் லோட்டஸ்' மூலம் பாஜக பெரிய அளவிலான சலுகைகளை வழங்கி தங்கள் எம்.எல்.ஏக்களை கட்சி மாறி வாக்களிக்க அழுத்தம் கொடுப்பதாக காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசாவில் மொத்தம் 4 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக 2 இடங்களில் உறுதியாக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முன்னாள் ஆளும் கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜேடி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஒரே வேட்பாளரை களமிறங்கியுள்ளது. 

நாளை வரை பெங்களூருவில் தங்கியிருக்கும் இந்த எம்எல்ஏக்கள், பின்னர் நேரடியாகப் புவனேஸ்வர் சென்று வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com