தெலுங்கானாவில் வெங்காயம் கிலோ ரூ.4-க்கு விற்பனை- விவசாயிகள் வேதனை

ஐதராபாத்தில் உள்ள மலக்பேட் சந்தையில் விவசாயிகள் கொண்டு செல்லும் வெங்காயம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 முதல் ரூ. 300 வரை மட்டுமே கிடைக்கிறது.
தெலுங்கானாவில் வெங்காயம் கிலோ ரூ.4-க்கு விற்பனை- விவசாயிகள் வேதனை
Published on

தெலுங்கானாவில் வெங்காயம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மலக்பேட் சந்தையில் விவசாயிகள் கொண்டு செல்லும் வெங்காயம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 முதல் ரூ. 300 வரை மட்டுமே கிடைக்கிறது.

அங்கு கொண்டு சென்றால், போக்குவரத்துச் செலவு கூட செலுத்தப்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். வேறு வழியின்றி, விகாராபாத் மாவட்ட வெங்காய விவசாயிகள் அருகில் உள்ள சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் வெங்காய மூட்டைகளைக் கொண்டு வந்து, 50-60 கிலோ மூட்டை ஒன்றை ரூ. 200-க்கு விற்றனர்.

சந்தையில் வெங்காயப் பயிருக்கு விலை இல்லை என்றும், மறுபுறம், பருவம் தவறிய மழையின் காரணமாக குறைந்தபட்சம் சிறிதளவாவது பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் வேதனையை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com