குருகிராமில் இந்தியாவின் முதல் 'myeloma&Lymphoma' சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம்: ரத்தப் புற்றுநோய்க்கு அதிநவீன தீர்வு!

"ஒரே நோய், ஒரே மருத்துவர், ஒரே இலக்கு" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது."
India's First 'Myeloma & Lymphoma' Super-Specialty Treatment Centre Launched in Gurugram
Published on

ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ஆய்வு நிறுவனம் (FMRI) இந்தியாவின் முதலாவது 'மைலோமா மற்றும் லிம்போமா' சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. "ஒரே நோய், ஒரே மருத்துவர், ஒரே இலக்கு" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

மரபியல், நோயியல், ஹீமாட்டாலஜி, கதிர்வீச்சுப் புற்றுநோயியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறை வல்லுநர்கள் அனைவரும் ஒரே தளத்தின் கீழ் இணைந்து செயல்படுவர். ஒவ்வொரு நோயாளியின் மரபணு அமைப்பை ஆராய்ந்து, அவர்களின் உடலுக்குப் பொருந்தக்கூடிய பிரத்யேக சிகிச்சை முறைகள் வழங்கப்படும். ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, செல்லுலார் சிகிச்சைகள் மற்றும் கார்ட்-டி செல் சிகிச்சை போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

இதுகுறித்து, முதன்மை இயக்குனர், ஹீமாட்டாலஜி & போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் டாக்டர் ராகுல் பார்கவா கூறுகையில்,

"இருவேறு ஆன்டிபாடிகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு உயிரணுக்களையும் புற்றுநோய் உயிரணுக்களையும் ஒன்றிணைத்து சிறந்த பலனைத் தருகிறதோ, அதேபோல இந்த மையம் பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த சிறந்த அறிஞர்களை ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மிக விரைவாக நோயாளிகளுக்கான சிகிச்சையாக மாற்றப்படும்." என கூறினார்.

மேலும், "மரபணு விவரக்குறிப்பு மூலம் ரத்தப் புற்றுநோயை மூலக்கூறு அளவில் புரிந்து கொள்ள முடிகிறது. இது நோயின் தீவிரத்தை துல்லியமாகக் கண்காணிக்கவும், இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்கவும் பெரிதும் உதவுகிறது."இந்த மையம் இந்தியாவில் மைலோமா மற்றும் லிம்போமா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கான ஒரு முதன்மைத் தேசியப் பரிந்துரை மையமாக விளங்கும் என்று ஃபோர்டிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் யஷ் ராவத் தெரிவித்துள்ளார். இது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் எதிர்காலப் புற்றுநோய் சிகிச்சைத் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com