முப்படைகளின் தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

1985-ல் ராணுவத்தில் இணைந்த ராஜா சுப்ரமணி பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
Published on

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.

மேலும், ராணுவ விவகாரங்கள் செயலராகவும் என்.எஸ்.ராஜா சுப்ரமணி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1985-ல் ராணுவத்தில் இணைந்த ராஜா சுப்ரமணி பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக ராஜா சுப்ரமணி உள்ளார்.

இந்நிலையில், தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com