

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி வசித்து வருகிறார்கள். அவர்களை வெளியேற்றுவோம் என சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா, பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவில் சி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்க தகுதியில்லாத, சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையில்லை. எல்லை பாதுகாப்புப்படையிடம் ஒப்படைத்து விடலாம். அவர்கள் அவர்களை சொந்த நாட்டிற்கு வெளியேற்றும் பணியை தொடங்குவார்கள். இது தொடர்பாக மேற்கு வங்க காவல்துறை மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை ஆகியற்றிற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச ஊடுருவல்காரர்களை கையாள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்துள்ள பரந்த அளவிலான கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல் எனும் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று சுவேந்து அதிகாரி விவரித்துள்ளார்.