Gas Shortage | PNG வைத்திருப்பவர்களுக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு

Gas Shortage | PNG வைத்திருப்பவர்களுக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு
Published on
Summary

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக PNG வைத்திருப்பவர்களுக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு

வீட்டு சமையலுக்கு மத்திய அரசு இரண்டு முறைகளில் எரிவாயு வழங்குகிறது. ஒன்று சிலிண்டர் மூலம் வழங்கும் LPG. மற்றொன்று குழாய் மூலம் வழங்கும் இயற்கை எரிவாயு (PNG).

மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதிகளில் அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக மோதல் விரிவடைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமையல் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு புக் செய்வதற்கான கால அவகாசத்தை 20 நாட்களில் இருந்து 25 நாட்களாக நீடித்துள்ளது.

இந்த நிலையில் PNG இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு இனிமேல் சமையல் கியாஸ் சிலிண்டர் நிரப்பி வழங்கப்படாது. அவர்கள் LPG-க்காக இனிமேல் புக் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் LPG இணைப்பை சரண்டர் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (LPG) தேவை சற்று குறையும் என மத்திய அரசு நினைக்கிறது.

இந்தியா எல்.பி.ஜி. தேவைகளில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதுவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்த 85 முதல் 90 சதவீதம் வரை இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூலமாகத்தான் இந்தியா வந்தடைகிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி மறுத்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com