இருமொழிக்கொள்கை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தி பாட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது என கர்நாடக அரசு அறிவிப்பு

இந்தி பாடத்திற்கு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Two Language policy in Karnataka
Two Language policy in Karnataka
Published on: 

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தியை கட்டாயப் பாடத்தில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இந்தி பாட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது.

அதாவது இந்தி பாடத்திற்கு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த மதிப்பெண்களில் இந்தி பாட மதிப்பெண் சேர்க்கப்படாது என்பதால் இருமொழிக்கொள்கை ஆதரவாளர்கள் அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், கர்நாடகாவும் மும்மொழிக்கொள்கையில் இருந்து வெளியேறி இருமொழிக்கொள்கைக்கு மாற முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com