இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது

மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது.பாட்னா, பெங்களூருவில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளது.
இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com