நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான இணையதள லிங்கை வெளியிட்டது NTA..!

ரத்து செய்யபட்ட நீட் தேர்வுகான நுழைவு கட்டணம் திரும்ப பெறும் வசதி இன்று தொடங்கி மே 27 வரை நீடிக்கும்.
NEET 2026 fees refund
Published on

இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி தொடங்கி நடைபெற்ற நீட் யுஜி 2026 தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதையடுத்து மறுதேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள், புதிய தேர்வுக்காக எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று முன்னதாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

ஜுன் 21 - ந் தேதி மறுதேர்வு

நீட் மறுதேர்வுக்கான தேதி ஜுன் 21 பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை எழுத்து மற்றும் தேர்வு முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மறுதேர்வில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்ப பெறும் வகையில் ஆன்லைன் வழிமுறையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள்

அதன்படி விண்ணப்பத்தாரர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் User name-ஐ பயன்படுத்தி Log In செய்தால் அதில் தேர்வு கட்டணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்தற்கான லிங்க் கொடுக்கப் பட்டிருக்கும். மே 22 முதல் மே 27 இரவு 11:50 இடைப்பட்ட காலத்திற்குள் தேவையான ஆவணங்களை இந்த லிங்கில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் தங்கள் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை பிழையின்றி பதிவேற்றம் செய்யும்படியும் கூறியுள்ளது.

கட்டணம் திரும்பப் பெறும் செயல்முறை மற்றும் வங்கி விவரங்களை சமர்ப்பிப்பது தொடர்பான கேள்விகளுக்கு +91-11-40759000 என்ற எண் மூலமாகவும், மேலும் neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com