நீட் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல்!

ஐஐடி, யுஜிசி, சிபிஎஸ்இ போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நீட் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல்!
Published on

மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துப்படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21 மறுதேர்வு நடைபெற உள்ளது.

வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, மோசடியில் பின்னால் இருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டறிந்து இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது.

இதற்கிடையே அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முன்னணி ஆகியவை, இந்த குளறுபடிக்கு பொறுப்பான தேசிய தேர்வு முகமையை கலைத்துக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை பிராமண பத்திரம் ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

அதில், தேர்வு பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள அதிரடி சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

அவை கீழ்வருமாறு,

உயர்நிலை வழிகாட்டுக் குழுவின் (HPSC) பரிந்துரைப்படி,

தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக்கப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 90 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும்.

தேர்வு முடிந்த பிறகு, ஏதேனும் முறையீடு நடந்ததா என்பதை கண்டறிய சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

தேர்வுக்கு முந்தைய வாரத்தில் தேர்வு மையங்களை விரிவாக ஆய்வு செய்தல், அவசரநிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

வரும் காலங்களில் நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்தலாமா அல்லது தற்போதைய OMR முறையிலேயே தொடரலாமா என்பது குறித்து, இந்த ஆண்டு நீட் மறுதேர்வு தேர்வு முடிந்த பிறகு சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மறுசீரமைப்பு:

தேசிய தேர்வு முகமையை முழுமையாக மறுசீரமைக்க 16 புதிய உயர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐஐடி, யுஜிசி, சிபிஎஸ்இ போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு பாதுகாப்பைக் கண்காணிக்க இரண்டு இணைச் செயலாளர் கூடுதல் தலைமை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த 18 மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களும், 621 மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்களில் உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com