நகை கடையில் துப்பாக்கி முனையில் நுழைந்த கொள்ளையர்கள் - துணிச்சலுடன் போராடிய ஊழியர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி

மகாராஷ்டிராவில் முகமூடியுடன் நகை கடையில் புகுந்த கொள்ளையர்களை, கடை ஊழியர்கள் போராடி விரட்டியடித்தனர்.
நகை கடையில் துப்பாக்கி முனையில் நுழைந்த கொள்ளையர்கள் - துணிச்சலுடன் போராடிய ஊழியர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி
Published on

நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நியூ சம்ருத்தி ஜூவல்லர்ஸ் கடைக்குள் இரவு 9 மணியளவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் கொள்ளையர்களை எதிர்த்து போராடிய போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து தப்பியோடிய முகமூடி கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கடை ஊழியர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com