பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் மர்ம நபர் | Karnataka

நகை அல்லது பணத்தைத் தொடாமல் இவற்றை மட்டும் திருடுவது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் மர்ம நபர் | Karnataka
Published on

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி என்ற நகர் அமைந்துள்ளது.

கங்காவதி நகரின் குடியிருப்புப் பகுதியான CBS பகுதியில், கடந்த 3-4 நாட்களாக இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீடுகளின் சுற்றுச்சுவர்களைத் தாண்டி குதிக்கும் அந்த நபர், துணிக்காயப்போடும் கம்பிகளில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடுகிறார்.

நகை அல்லது பணத்தைத் தொடாமல் இவற்றை மட்டும் திருடுவது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அந்த மர்ம நபர் உள்ளாடைகளைத் திருடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ச்சியாக நடைபெறும் இந்தச் சம்பவத்தால், இது ஏதேனும் ஒரு 'சைக்கோ' நபரின் வேலையாக இருக்கலாம் என்று பெண்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் வெளியே வரவும் அவர்கள் தயங்குகின்றனர்.

கங்காவதி நகர போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com