மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் கண்ணாடி கோபுர நடைபாதை

மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் மூணாறில் உள்ள பொட்டானிக்கல் கார்டனில் இந்த வாட்ச் டவர் நிறுவப்பட்டுள்ளது.
மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் கண்ணாடி கோபுர நடைபாதை
Published on

கேரளம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறு நகரில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய கண்ணாடி கோபுரம் (வாட்ச் டவர்) அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் மூணாறில் உள்ள பொட்டானிக்கல் கார்டனில் இந்த வாட்ச் டவர் நிறுவப்பட்டுள்ளது. சுமார் ரூ.3% கோடி செலவில், 34 மீட்டர் நீள நடைபாதையுடன் இந்த டவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள், சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க முடியும். ஒரே நேரத்தில் 30 பேர் வரை இந்த வாட்ச் டவரில் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்ற கண்ணாடி வாட்ச் டவர் ஏற்கனவே வாகமன் பகுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ச் டவரில் ஏறி நடப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.250 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com