search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவரானார் ஆகாஷ் அம்பானி
    X

    ஆகாஷ் அம்பானி

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவரானார் ஆகாஷ் அம்பானி

    • இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.
    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்தார்.

    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது என டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.

    இதற்கிடையே, ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    ஆனால், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனராகவும் ஆகாஷ் அம்பானி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ போன் பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான சாதனமாக மாறியது. இந்த போன் புரட்சிக்கு பின்புலம் ஆக ஆகாஷ் இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×