கருப்பு நிறத்தில் கணவன்: பச்சிளம் குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுச் சென்ற மனைவி

கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி அடிக்கடி அவருடன் சண்டையிட்டுள்ளார்.நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்றார்.
கருப்பு நிறத்தில் கணவன்: பச்சிளம் குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுச் சென்ற மனைவி
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. விஷால் சுற்றே கருப்பாக இருப்பதால் திருமணமானது முதல் மனைவி அவரை கிண்டல் செய்து வந்ததுடன், நிறத்தைக் காரணம் காட்டி கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, விஷால் மனைவிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கணவன் வீட்டில் வைத்துவிட்டு அந்தப் பெண் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவியை அழைத்துவர அவரது வீட்டிற்கு விஷால் சென்றபோது, கருப்பு நிறத்தை காரணம் காட்டி கணவருடன் திரும்ப மறுத்தார்.

இதனால் விஷால், தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வரும் சனிக்கிழமை இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்துசென்றது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com