

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பெண் மருத்துவரிடம் அத்துமீறி மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பெண் நோயாளி ஒருவர் அவசரச் சிகிச்சைக்காக புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
நோயாளியுடன் வந்த பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அனில் ஸ்ரீவஸ்தவ் மற்றும் அவரது நண்பர் மருத்துவப் பணியாளர்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளனர். இதனை அங்கிருந்த பெண் மருத்துவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அனில் ஸ்ரீவஸ்தவ் பெண் மருத்துவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதுடன் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
cஅங்கிருந்த செவிலியர்களிடமும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் அனில் ஸ்ரீவஸ்தவ் மற்றும் அவரின் நண்பர் மீது போலீசார் வாழகுபதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.