பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது மில்மா!

அமுல் நிறுவனத்தை தொடர்ந்து மில்மா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.
பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது மில்மா!
Published on

கேரள கூட்டுறவு பால் விற்பனை நிறுவனமாக மில்மா, மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மில்மா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மில்மா தலைவர்,

விலை உயர்வின் பெரும் பகுதி நேரடியாக பால் உற்பத்தியாளர்களுக்கு (விவசாயிகளுக்கு) சென்றடையும் என தெரிவித்தார்.

இந்த விலை உயர்வுக்கான ஒப்புதலை முந்தைய எல்.டி.எஃப் அரசு வழங்கியிருந்த போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் இந்த அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, மில்மாவின் நெய், தயிர் உள்ளிட்ட இதர பால் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com