இந்தியாவில் விற்பனைக்கு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் செடான் வகை மாடல் எலெக்ட்ரிக் கார்

60 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 20 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.
Mercedes-Benz S-Class
Published on

மெர்சிடிஸ் பென்ஸ் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம்:

ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், தனது முதன்மையன செடான் வரிசையில் பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

விலை நிர்ணயம்:

இந்தியாவில் இரண்டு வகையான மாடல் கார்களை இந்த கார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ் 450இ லாஞ்ச் எடிஷன் எக்ஸ்க்ளூசிவ் லைன் ரூ.2.20 கோடியாகவும், எஸ் 450இ மேனுஃபாக்டூர் எடிஷன் ஏஎம்ஜி லைன் ரூ.2.38 கோடி ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையான மாடல் வாகனங்கள் கடந்த ஆண்டு வெளியான மாடலின் விலையை விட ரூ.35 லட்சம் விலை அதிகரித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் மைலேஜ்:

இந்த செடான் வகை கார் 5.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. மேலும் இந்த வகை வாகனங்கள் 115 கிமீ வரை மின்சாரத்தில் மட்டுமே பயணிக்கும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இந்த வாகனம் ஒரு லிட்டருக்கு 32.33 கி.மீ எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சமான 60 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், சுமார் 20 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வடிவமைப்பு:

பழைய போர்ட்ரெய்ட் திரையில் இருந்து அடுத்த தலைமுறையான MB.OS கட்டமைப்பில் இயங்கும் 14.4-அங்குல மையத் தொடுதிரை மற்றும் இரட்டை 12.3-அங்குல திரைகளைக் கொண்ட முழுமையான MBUX சூப்பர்ஸ்கிரீன் அமைப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக 15 ஏர்பேக்குகளை கொண்ட ஒரே மாடல் காராக இந்த குறிப்பிட்ட எஸ்-கிளாஸ் மாடல் விளங்குகிறது.

இந்தியாவில் விற்பனை:

இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் தீபாவளியை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com