

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, சலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்புள்ளியில் ஜூலை.15 அன்று முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்ட ஆட்சேபனை இல்லை என ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், தவறினால் கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விட மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
ஆனேகலில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கன்னட ஆதரவுச் செயற்பாட்டாளர் வாட்டாள் நாகராஜ்,
மேகதாது திட்டம் நடக்கக்கூடாது என்று தமிழ்நாடு எம்.பி.க்கள் கூறுகிறார்கள். நமது எம்.பி.க்களுக்கு வாயே இல்லையா? இவர்களைப் போன்றவர்கள் யாருக்குத் தேவை? டி.கே.சிவகுமார் தமிழ்நாடு உடன் நட்பு பாராட்டுகிறார்.
எனவே ஜூலை 15ஆம் தேதி ஒரு புதிய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம் என தெரிவித்துள்ளார்.