மோடியின் தேர்தல் பிரசார நெறிமுறை: தேர்தல் கமிஷனை விளாசிய காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
Published on
Summary

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதி என்பது மோடியின் தேர்தல் பிரசார நெறிமுறையாகவிட்டது என தேர்தல் கமிஷனை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார்

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் {(Model Code of Conduct (MCC)} 2014-ல் இருந்து மோடியின் பிரசார நெறிமுறையாகியுள்ளது. அது அவதூறு, வெறுப்பு, பொய் போன்ற வைரசை பரப்புதல், துன்புறுத்தல் நிறைந்ததாக இருக்கும்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஜி-2ஆல் (குஜராத்தில் இருந்து வந்த மோடி, அமித் ஷா) ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும்.

திட்டங்களை தொடங்கி வைத்தல் போன்றவற்றை ஜி-1 முடித்திருந்த நிலையில், தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தின் சட்டசபை காலம் மே முதல் ஜூன் மாதத்திற்குள் முடிவடைய இருப்பதால் இன்று தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி, அமித் ஷா தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com