

அமெரிக்கா- ஈரான் இடையிலான ஹார்முஸ் மற்றும் ஈரான் துறைமுக முற்றுகை தொடர்பாக எண்ணெய் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்த வண்ணம் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி சரிவை சந்தித்தன.
இந்த நிலையில் இன்று தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1260.13 புள்ளிகள் சரிந்தது. இறுதியாக 999.79 புள்ளிகள் சரிந்து 76,664.21 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 275.10 புள்ளிகள் சரிந்து 23,897.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஹெச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன. பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் உயர்வை சந்தித்தன.