மணிப்பூரில் மீண்டும் பதற்றம்..! 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை..

மணிப்பூரில் வாழ்வாதாரத்தை முக்கிய பாதையான தேசிய நெடுஞ்சாலை - 2 முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்..! 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை..
Published on

மணிப்பூரின் காங்போக்பி மாவட்ட தேவாலய தலைவர்கள் மற்றும் சிலர் இன்று காலை பக்கத்தில் இருக்கும் சுராசந்த்பூரில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காங்போக்பி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் அவர்களையே வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

காவல் துறையின் கூற்றுப்படி, நாகா பழங்குடியின ஆயுதக் குழுக்களுக்கும், குக்கி பழங்குடியின சமுதாயத்திற்கும் இடையே உள்ள இனக்கலவரத்தால் தேவாலய தலைவர்களை தீவிரவாத குழுக்கள் தாக்கியுள்ளனர்.

கோட்சிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்த தாக்குதலை அவர்கள் நடத்தினர்.

சமூகங்கங்களுக்கிடையே சமாதானமாக இருந்த ரெவரெண்ட் வி. சிட்ல்ஹௌ, ரெவரெண்ட் கைகுலன் மற்றும் பாஸ்டர் பாவோகுலன் என்ற 3 தேவாலய தலைவர்களை சுட்டுக்கொன்றனர். மற்றவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த கொடுறகொலையை கண்டித்து குக்கி மாணவர் அமைப்பு மற்றும் தாதோ அமைப்புகள் சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பியின் ஹில்ஸ் பகுதிகளில் காலவரையற்ற அவசர முழு அடைப்பிற்கு உத்தரவிட்டுள்ளன.

மணிப்பூரில் வாழ்வாதாரத்தை முக்கிய பாதையான தேசிய நெடுஞ்சாலை - 2 முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிப்பூரில் அசம்பாவிதம் நடக்க கூடும் என இராணுவம் மற்றும் துணை இராணுவப்படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்த விசாரணையில் போலிசார் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com